Thursday, 21 July 2022

தமிழ் பத்தாம் வகுப்பு ( 2022 - 2023 ) துணைப்பாடம் பாய்ச்சல்

 



தமிழ்

பத்தாம் வகுப்பு ( 2022 - 2023 )

துணைப்பாடம்

பாய்ச்சல்

குறிப்புச் சட்டகம்:

                    முன்னுரை 

                    தெருமுனை திறமைகள். 

                    பக்க வாத்தியம்.

                    அனுமார் ஆட்டம். 

                    அனுமார் அருகில் அழகு வரல். 

                    ஆற்றங்கரை ஓரம்.

                    முடிவுரை .


முன்னுரை:

                     புதின எழுத்துகளால் தனது புகழைத் தமிழ் உலகில் முத்திரைப் பதித்து சாகித்திய 

அகாதெமி விருதுபெற்ற சா. கந்தசாமியின் ‘பாய்ச்சல்’ கதையில் மனித இதயத்தின் 

ஆழங்களுக்கு ஒளியை அனுப்புவதே கலைஞனின் நோக்கம் பற்றி இக்கட்டுரையில் 

காண்போம்.


தெருமுனை திறமைகள் :

                     தெருமுனையில் தினந்தோறும் எத்தனையோ கலைகள் நடைபெற்றுக் 

கொண்டிருக்கின்றன. நடுத்தர மக்களை நம்பி தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள 

அனுமார் வேடமிட்டு ஒருவன் அனைவரையும் மகிழ்விக்கிறான்.

                     குரங்குபோல ஓடிவந்தான். இரண்டு கால்களையும் மாறிமாறி தலையில் அடித்து 

வேகமாகக் கைகளை வீசி நடந்தான். கொஞ்சம் தூரம் சென்று கடையில் இருந்த 

வாழைத்தாரிலிருந்து பழங்களைப் பறித்து அருகில் இருந்தவர்களுக்கெல்லாம் கொடுத்து 

தானும் ஒரு பழம் சாப்பிட்டான்.


பக்க வாத்தியம்:

                    அனுமார் வேடமிட்டு ஒருவன் சதங்கை மேளம், தாளம், நாதசுரம் ஒலிக்க அதற்கு 

ஏற்றாற்போல் குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்தோடினான். நீண்ட வாலை மேலே சுழற்றி 

தரையில் அடித்து புழுதியைக் கிளப்பினான்.


அனுமார் ஆட்டம்:

                     இசைக்கேற்ப ஆடியவன் தன்னையே மறந்து கைகளை மார்போடு அணைத்துக் 

கொண்டான். தான் உண்மை அனுமாராக மாறியதை எண்ணி ‘கீச் கீச்’ என்று கத்திக்கொண்டே 

பந்தக்காலைப் பற்றிக்கொண்டு மேலே ஏறினான். திடீரென மேளமும் நாதசுரமும் ஒலிக்கத் 

தொடங்கியபோது கூட்டம் திகைத்தது. கண்மூடி கண் திறப்பதற்குள் அனுமார் கீழே குதித்தார். 

வாலில் பெரிய தீப்பந்தம் கண்டு கூட்டம் பின்வாங்கியது.

                     அனுமார் கால்களைத் தரையில் அடித்து உடம்பைக் குலுக்கினார். நெருப்பு 

அலைபாய்ந்தது. கைகளைத் தட்டிக் குட்டிக்கரணம் போட்டான். கூட்டம் பாய்ந்தோடியது. 

அனுமார் தன் கம்பீரமான தோற்றத்தோடு நின்று சிரித்தார். கூட்டமும் அமைதியானது.




அனுமார் அருகில் அழகு வரல்:

                     அனுமாரால் வாலை வெகு நேரமாகச் சுமக்க முடியாததால் அழகு கையில் 

கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தான். வாலைத் தூக்கிக் கொண்டு அழகாலும் ஓட 

முடியவில்லை. வெட்கத்தோடு வாலைப் போட்டுவிட்டு வெளியேறினான்.

                     காரில் வந்தவர் ஹாரன் அடிக்க ஒருவன் காரை மறித்தான். அனுமார் எரிச்சலுற்று 

அவனை வாலால் பின்னுக்கு இழுத்தான். கார் முன்னே வந்து அனுமாருக்குப் பணம் கொடுக்க 

அனுமார் வாங்காமல் மேளக்காரனைப் பார்க்க மேளக்காரன் வாங்கி மடியில் வைத்துக் 

கொண்டான்.


ஆற்றங்கரை ஓரம்:

                     ஆட்டமில்லாமல் அனுமார் நடக்க ஆரம்பித்தபோது கூட்டம் குறைய ஆரம்பித்தது. 

மேளக்காரன் தவுலைக் கீழே இறக்கி வைத்தான். ஆட்டம் முடிந்தது என்று தீர்மானம் செய்து 

கூட்டம் முற்றிலும் கலைந்தது. அனுமார் வாயால் மூச்சுவிட்டு ஆலமரத்தில் சாய்ந்துகொண்டார்.

                     மேளக்காரன் பணத்தைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொடுத்தான். அனுமார் அதை 

வாங்கிக் கொண்டு ஆற்றங்கரையோரமுள்ள கோயில் தூணில் சாய்ந்துகொண்டு அனுமார் 

உட்கார்ந்தார்.


முடிவுரை:

                     இக்கதையில் கூட்டத்தினரை மகிழ்விக்க வந்த அனுமாரின் ஆட்டத்தைக் கண்டு 

மயங்கி அனுமாரைப் போலத் தானும் ஆடினான் அழகு. அனுமாரோடு ஒன்றிப் போனான். 

                   "  சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

                      துலையல்லார் கண்ணும் கொளல் " - என்ற வள்ளுவரின் வாக்கின்படி, ஒரு 

கலைஞன் இன்னொரு கலைஞனை உருவாக்க முடியும் என்பதை ‘பாய்ச்சல்’ கதையில் வரும் 

அனுமார் கலைஞன் மூலம் அறியமுடிகிறது








பத்தாம் வகுப்பு ( 2022 - 2023 ) துணைப்பாடம் புதிய நம்பிக்கை

 



தமிழ்

பத்தாம் வகுப்பு ( 2022 - 2023 )

துணைப்பாடம்

புதிய நம்பிக்கை

குறிப்புச் சட்டகம்:

                    முன்னுரை.

                    மேரியின் குடும்பம்.

                    மேரிக்கு ஏற்பட்ட அவமானம்.

                    உதவிக்கரம்  நீளுதல்.

                    மேரியின்  கனவும்  களிப்பும்.

                    புதியதோர்  பயணம்.

                    முடிவுரை .


முன்னுரை:

                     எந்த ஒரு சமூகம் கல்வி இல்லாமல் இருக்கிறதோ அச்சமூகம் அழிவை நோக்கிச் 

செல்கிறது என்பதாகும்.  அத்தகு சமூகத்தில் பிறந்து கல்வி என்னும் ஒளிச்சுடரைத் தன் கையில் 

ஏந்தி ஓராயிரம் விளக்கை ஏற்றிய ‘அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்ஸியோல் 

பெத்யூர்’ பற்றி “ புதிய நம்பிக்கை’ என்னும் கதை வழியாக அறிவோம்.


 மேரியின் குடும்பம்:

                     தந்தை சாம், தாய் பாட்ஸி, பாட்டி பல சகோதர சகோதரிகளைக் கொண்ட ஏழ்மையான 

குடும்பம்.  காலை 5 மணி முதல் மாலை வரை உழைக்கும் குடும்பம். கல்வி அறிவு இல்லாததால் 

இவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. தன் குடும்பத்தில் மேரி  மட்டும் வித்தியாசமானவள். 

தாய் அழைக்கும் போதும் சரி,  பருத்தியின் முதல் பூவைப்  பார்க்க வேண்டும் என்ற எண்ணம் 

தோன்றும் போதும் சரி, தான் முதலில் செய்ய வேண்டும் என்று எண்ணுபவள்.


 மேரிக்கு ஏற்பட்ட அவமானம் : 

                     தன் தாயுடன் வில்சன் வீட்டிற்கு சென்ற மேரி அங்கு குழந்தைகள் விளையாடுவதைக் 

கண்டு வியப்புற்றாலும்   அவள் கண்கள் அங்கிருந்த ஒரு புத்தகத்தின் மீது சென்றது . ஒரு 

புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்க்கின்ற போது வில்சனின் இளைய மகள் புத்தகத்தை 

வெடுக்கென்று  பிடுங்கி உன்னால் படிக்க முடியாது என்று கூறினாள். அந்த வார்த்தை அவள் 

மனதைக் கிழித்தது.  உடனேவீட்டை விட்டு வெளியேறினாள் . அன்று முதல் அவள் மனம் 

ஒன்றை தீர்மானித்தது.’ நான் படிக்க வேண்டும் ’ என்ற ஒற்றை வரி அவள் மனதை அசை 

போடவைத்தது.


 உதவிக்கரம்  நீளுதல்:

                     வயலில் தன் முதுகில் இருந்த  பருத்தி சுமையை இறக்கி வைத்துவிட்டு 

திரும்புகின்றபோது  தனக்கு அறிமுகம் இல்லாத பெண் நிற்பதைக் கண்டாள். இருவரும் 

சிரித்தனர். என் பெயர் வில்சன்,” உன்னைப் போன்ற பெண்களைப் படிக்க வைக்க வேண்டும். 

அதுதான் என் ஆசை. நீ எவ்வளவு சீக்கிரம்  மேயெல் வில்லிக்கு வர முடியுமோ வா”என்றாள். 

பதில் கூற முடியாமல் வாயடைத்து நின்றாள்  மேரி.

“  தாம் இன்புறுவது உலகுஇன்  புறக்கண்டு 

   காமுறுவர் கற்றறிந் தார் “ என்ற குறளுக்கு ஏற்ப மேரிக்கு மிஸ் வில்சன்  உதவிக்கரம் 

நீட்டினார்


மேரியின்  கனவும்  களிப்பும்:

                      தன் வீட்டு மேசை மீது பலகாலமாக இருந்த பைபிளை எடுத்தாள். இதை நான் படித்து 

விடுவேன், படித்துக் காட்டவும் செய்வேன் என்று கனவு காணத் தொடங்கினாள்.  தந்தை 

மேரிக்கு சிலேட்டு, பலப்பம் வாங்கித் தந்தார். 

                     தினம் தினம் புதியதாய் கற்றால் வாழ்வில் மெல்ல உயரத் தொடங்கினாள் .தன்னைச் 

சூழ்ந்த நிலம் தம்மிடம் வந்த சம்பளக் கணக்கைக்  கேட்டதை எல்லாம் மனதில் அசைபோட்டு 

புதிய கல்வியால் புதிய நபராக மேரி மாறினாள். மேரிக்கு எழுதப் படிக்கத் தெரியும் என பட்டம் 

அளித்துச் சிறப்பித்தது. 

                       

புதியதோர்  பயணம் :

                    பட்டமளிப்பு விழாவின்போது வில்ஸன் தோளில் மேரியை அனைத்து  ‘நீ எனக்கு 

என்ன செய்யப் போகிறாய் என்றார்.” மிஸ் நான் மேலும் படிக்க விரும்புகிறேன்’ என்றாள். 

ஆனால் அலைகடலில் அகப்பட்ட கப்பல் கரை சேர இயலாத நிலை போல் இருந்தாள். அப்போது 

மிஸ் வில்ஸன் அங்கு வந்து ,வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பின குழந்தைகள் 

படிப்பிற்காக பணம் அனுப்பி இருக்கிறார். அதைப் பெறுவதற்குரிய ஆளாக நீதான் 

தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறாய் . நீ மேல்படிப்பிற்காக டவுனுக்குப்  போகவேண்டும் தயாராகு 

என்றார்  மேரியிடம்  .

                     மேரி  மேற்படிப்பிற்குச்  செல்ல தொடர்வண்டி நிலையத்தில்  ஊரே ஒன்று கூடியது, 

குட்பை மேரி, குட்பை வெற்றி உண்டாகட்டும் என்று வாழ்த்தி விடை கொடுத்தனர் .


முடிவுரை : 

                     சாதாரணப் பெண்ணாக பிறந்து தனது முயற்சியாலும் பலரது உதவியாலும் 

வாழ்வில் உயர்ந்து, சமுதாயத்தின் அறியாமை இருளைப் போக்க தோன்றிய மேரி ஜென்னின் 

வாழ்வியல் நிகழ்வுகளைப் போல நாமும்  அவமானங்களையும் வெகுமானமாக மாற்றி 

வாழ்வில் வெற்றி பெறுவோம்.




Monday, 28 March 2022

10 இயல்-1 செய்யுள் பாடல் வினா

பத்தாம் வகுப்பு
தமிழ்                                      
இயல் - 1. செய்யுள் பாடல் வினா

செய்யுளைப் படித்து கீழேயுள்ள  பல்நோக்கு வினாக்களுக்கு விடையளிக்க.      
அன்னை மொழியே ! அழகார்ந்த செந்தமிழே !
முன்னைக்கும் முன்னை முகிழ்ந்த நறுங்கனியே !
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிலையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே !
தென்னவன் மகளே ! திருக்குறளின் மாண்புகழே !
இன்னறும் பாப்பத்தே ! எண்தொகையே ! நற்கணக்கே !
மன்னுஞ் சிலம்பே ! மணிமே கலைவடிவே !
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே !
வினாக்கள்:
 1. இப்பாடல் இடம் பெற்ற நூல் ____________.
அ. அன்னை மொழியே.                ஆ. பெருமாள் திருமொழி.        
இ. முல்லைப்பாட்டு.                    ஈ. நீதி வெண்பா.

2. இப்பாடல் இடம்பெற்ற தொகுதி ____________.
அ. அன்னை மொழியே.           ஆ. செந்தமிழ்.          இ. கனிச்சாறு.       ஈ. மாண்புகழ்.

3. முன்னை என்பதன் பொருள் ______________.
 அ. புதுமை.          ஆ. பழமை.          இ. பண்ணை.          ஈ. திண்ணை.         

4. இப்பாடலின் ஆசிரியர் ____________.
அ. பாரதியார்.                ஆ. ந.பிச்சமூர்த்தி.     
 இ. பெருஞ்சித்திரனார்.                ஈ. க. சச்சிதானந்தன்.

5. முகிழ்ந்த என்பதன் பொருள் ____________.
அ. முடிந்த.             ஆ. மூழ்கிய.                இ. தோன்றிய.              ஈ. தோன்றாத.

6. முன்னும் என்பதன் பொருள் ____________.
அ. மயக்கம்.           ஆ. பொங்கியெழும்.             இ. முன்னை.            ஈ. முதன்மையான.

7. தென்னவன்.
அ. சேரன்.          ஆ. சோழன்.          இ. பாண்டியன்.       ஈ. பல்லவன்.

8. மாண்பு.
அ. பெருமை.              ஆ. மறுமை.                   இ. சிறுமை.                ஈ. தனிமை.

9. மண்ணுலகம். ( பிரித்து எழுதுக )
அ. மண் + ணுலகம்.         ஆ. மண் + உலகம்.         இ. மண்ணு + லகம்.             ஈ. ம + உலகம்.

10. இச்செய்யுள் இடம் பெற்ற பாவகை.
அ. வெண்பா.               ஆ. ஆசிரியப்பா.             இ. வஞ்சிப்பா.             ஈ. கலிப்பா.

11. இப்பாடலில் குறிப்பிடப்படும் காப்பியங்கள்.
அ. எட்டுத்தொகை பத்துப்பாட்டு.                    ஆ. சிலப்பதிகாரம் குண்டலகேசி.
இ. சிலப்பதிகாரம் மணிமேகலை.                    ஈ. சிலப்பதிகாரம் வளையாபதி.

12. இப்பாடலின் ஆசிரியரின் இயற்பெயர் ____________.
அ. மாங்குடி மருதனார்.                    ஆ. க.சச்சிதானந்தன்.
இ. துரை. மாணிக்கம்.                     ஈ. பெருஞ்சித்திரனார்.

13. 'நற்கணக்கே' என்று குறிப்பிடப்படுவது எது ?
அ.சிலப்பதிகாரம் மணிமேகலை                     ஆ. பதினெண்கீழ்க்கணக்கு.
இ. பதினெண்மேற்கணக்கு.                    ஈ. திருக்குறள்.

14. செந்தமிழ். ( பிரித்து எழுதுக )
அ. செந் + தமிழ்.               ஆ. செ +தமிழ்.               இ. செம்மை+ தமிழ்.               ஈ. செம் + தமிழ்.

15. கடல்.
அ. ஆழி.               ஆ. கேண்மை.               இ. பார்.               ஈ. விசும்பு.